Breaking News

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

ஈரோடு:

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குநர் அலுவலக கட்டுபாட்டில் காலியாக உள்ள மீன் வள உதவியாளர்  பணியிடங்கள் இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மொத்தம் 5 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இன சுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி இடத்தின் பெயர் : மீன்வள உதவியாளர் 

காலிபணியிடம் : 5

தகுதி : 

1 தமிழில் எழுதப்படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்

2. நீந்துதல், மீன் பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் அறுந்த வலைகளை சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும்

3. மேற்கண்ட தகுதிகளை தகுதி தேர்வு மற்றும் நேர்காணலில் பரிசோதனை செய்யப்படும்

4. மீன்வளத்துறை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்

இனசுழற்சி : 

MBC முன்னுரிமை பெற்றவர்-(V) - 1

BC முன்னுரிமை அற்றவர் பொது - 1

BC முன்னுரிமை பெற்றவர் முஸ்லீம் பொது  - 1

SC முன்னுரிமை அற்றவர் பொது - 1

MBC முன்னுரிமை அற்றவர் பொது - 1

வயது வரம்பு : 

01-07-2021 அன்று SC/ST பிரிவினருக்கு 37 வயதும் மற்றும் MBC/BC பிரிவினருக்கு 34 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஈரோடு-638011 (தொ.எண்: 0424- 2221912) என்ற முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் நேரிலோ அல்லது adferode1@gmail.com என்ற மின்னஞ்சலில் கோரிக்கை செய்யும்இபட்சத்தில் மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், வயது நிரூபண சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ்  நகல், இருப்பிட சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்பவேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 

42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், 

இரண்டாவது தளம், 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், 

ஈரோடு-638011 

என்ற முகவரிக்கு 10-12-2021 அன்று பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்க தக்க வகையில் விண்ணப்ப உறையின் மேல் “ஈரோடு மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்” என எழுதி அனுப்பிட வேண்டும்.

எனவே, ஈரோடு மீன்வள உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி  தெரிவித்துள்ளார்

No comments

Thank you for your comments