உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இருளர் குடும்பகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கல்...!
காஞ்சிபுரம்:
இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாங்கட்டளை ஊராட்சியில் உள்ள இருளர் குடும்பகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இயக்கத்தின் கொள்கை வழி நின்று தனது பயணத்தை தொடங்கி மக்களுக்காக பணியாற்றி வரும் கழகத்தின் எதிர்காலம், ஒற்றைச் செங்கல் கொண்டு சரித்திரத்தை மாற்றி, "மக்கள் பணியே எனக்கான பிறந்தநாள் பரிசு" எனக்கூறி எளியவர்கள் மனதில் அமர்ந்து விட்ட திராவிட இளஞ்சூரியன் கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டாங்கட்டளை ஊராட்சியில் உள்ள இருளர் குடும்பகளுக்கு காஞ்சி மாவட்ட பெருந்தலைவர் படப்பை ஆ.மனோகரன் அவர்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.வந்தேமாதரம் அவர்கள் மற்றும் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி (ம) ஒன்றிய மாணவர்அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments