கொட்டும் மழையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்:
பூந்தமல்லியில் கொட்டும் மழையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 370 டாஸ்மாக் கடைகளில் 170 டாஸ்மாக் கடைகளின் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூந்தமல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொட்டும் மழையில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மாநில துணைச்செயலாளர் மாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இதில் லிங்கேஷ்வரன், செல்வம்,நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்..

No comments
Thank you for your comments