Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு... விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வரதராஜபுரம், பிடிசி காலணி , அமுதம் நகர் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விரைவாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 


தமிழகத்தில் கடந்த ஓரு‌மாதமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம் , முடிச்சூர் பகுதிகளில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

வரதராஜபுரம் பி டி சி காலணி பகுதியில்  நீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.அடையாறு கால்வாயில் இருந்து வெளியேறும் நீரை எடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு மனு அளித்தனர். 



அதன்பின் அப்பகுதியில் சூழ்ந்துள்ள நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

அமுதம் காலனி பகுதியில் நீரால் சூழ்ந்துள்ள பொதுமக்களுக்கு 300க்கும் மேற்பட்டோர் க்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

ஆய்வின்போது ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறப்பு அதிகாரிகளான அமுதா மற்றும் காஞ்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments