Breaking News

பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு அகற்றகோரி சமூகநீதிக் கட்சி தலைவர் புகார் மனு...

கோவை:

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சித் தலைவரிடம் சமூகநீதிக் கட்சி தலைவர் ந.பன்னீர் செல்வம் மனு அளித்தார்.



அம்மனுவில் குறிப்பிட்டதாவது பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மூடி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பறிமுதல் செய்யப்பட வேண்டிய கனிமவளங்கள் தளவாடங்களை சட்ட விரோதமாக திருடும் செங்கல் சூளை அதிபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி எஸ் சமீரன்  அவர்களிடம் மனு அளித்துள்ளார்.

உடன் தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள பாதுகாப்பு குழு தலைவர் கணேஸ், பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் TMS, குருந்தமலை வன பாதுகாப்பு குழு செயலாளர் காரமடை செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments