தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் விஞ்ஞானிக்கு தேசிய அங்கீகாரம்.
கோவை:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கைவள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனரும், மண்ணியல் பேராசிரியருமான முனைவர் அர், சாந்தி அவர்களுக்கு மண் வள ஆராய்ச்சியில் சிறந்த ஆளுமைக்கான(FELLOW) விருது சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஸ்ரீ நிகேதனில் உள்ள விஸ்வ பாரதியில் நடைபெற்ற இந்திய மண்ணியல் கழகத்தின் 85வது வருடாந்திர மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதானது, மண் வளத்திற்கும் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற ஒருங்கிணைந்த பயிருட்டச்சத்து மேலாண்மையில் (STCR-IPNS) பல்வேறு பயிர்களுக்கு மண் வகைகளுக்கேற்ப உரப்பரிந்துரைகளை உருவாக்குவதில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவரது தலைமையில் 'டெசிபர்-2010 மற்றும் 2020' கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மண் வளத்திற்கு ஏற்ப உரப்பரிந்துரைகளும் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
முனைவர் அர. சாந்தி அவர்கள் பல்கலைக்கழகத்தின் மண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம் அமைவதற்கும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் மண் பரிசோதனை கூடங்கள் வலுப்படுவதற்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இவர் தலைமையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புவிசார் தகவல் தொழில்நுட்பம் மூலம் மண்வள வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பயிர் சத்து மேலாண்மை சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments