ஜவுளி நூல் விலை ஏற்றத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!
நாமக்கல், நவ.19-
பள்ளிபாளையத்தில் நூல்விலையேற்றத்தை கண்டித்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ள நிலையில் நூல் விலையேற்றத்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் மிகப்பெரிய அளவு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஜவுளி நூல் விலையேற்றத்தை கண்டித்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்திலும் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தின் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜவுளி நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய உதவித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் அசோகன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர் S.முத்துக்குமார், சங்க மாவட்ட தலைவர் மோகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், சிஐடியு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜவுளி நூல் விலை ஏற்றத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
No comments
Thank you for your comments