விவசாயிகள் சவால் விடும் நூதன போராட்டம்
திருச்சி, நவ.17
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் செருப்பை கழட்டிவைத்து சவால் விடும் நூதன உண்ணாவிரதம் 37ம் நாள் போராட்டம் இன்று (17.11.2021) நடைபெற்றது.
ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சிகாரர்கள் கொடுத்த வாக்குறுதியை செய்யுங்கள் என்று கேட்பதற்கு அரசியல் அமைப்பு சட்டம் விவசாயிகளுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதன்படி மாண்புமிகு. மோடி ஐயா அறிவித்த இரண்டு மடங்கு இலாபம் தரும் விலையை கொடுங்கள் என்று கேட்பதற்கும், இலாபகரமான விலையை தராத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், கோதாவரி-காவிரி இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று போராடுவதற்கும் விவசாயிகளுக்கு உரிமை இருப்பதனால் தான் எங்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராடுகிறது. போராடுவதற்கு உரிமையில்லை என்று எந்த அரசியல் கட்சியும் நிரூபித்தால் நாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கழட்டி வைக்கும் செருப்பை கொண்டு எங்களை தாக்கலாம். ஜனநாயக நாட்டில் விவசாயிகளை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம்.
செருப்பை கழட்டி வைத்து சவால்விடும் நூதன போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணை தலைவர்கள் பி.மேகராஜன்,கரூர் எஸ்.தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் இ.பரமசிவம்,மாநில செயலாளர்கள் நகர் ஏ.ஜான் மெல்கியராஜ், லால்குடி வி.தியாகு,மாநில துணை சட்ட ஆலோசகர் கே.முத்துசாமி, மாநில செய்தி தொடர்பாளர்கள் தீராம்பாளையம் எஸ்.பிரேம்குமார், சி.வரப்பிரஹாஸ் முன்னிலையில் விவசாயிகள் திருச்சியில் திருச்சி & கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 17.11.2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு 37-ம் நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது..
No comments
Thank you for your comments