காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம், நவ.17-
சென்னை தென்னக இரயில்வே தலைமையகத்தில் நடைப்பெற்ற கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு துரித இருப்புப்பாதை போக்குவரத்து திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு
1) மகளிர்க்கான சிறப்பு இரயில் மற்றும் கூடுதல் இரயில் பெட்டிகள், 2) இரயில் நிலையங்களில் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்தங்கள்.
3) இரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,
4) பயணியர் சுகாதாரமான ஓய்வு அறை,
5) கால்நடைகள் விபத்துக்களை தடுப்பதற்காக சுரங்கபாதைகள்,
6) இரயில் நிலையஙலகளில் மேற்கூரைகள்,
7) கூடுதல் இருப்புபாதைகள்,
8) சரக்கு கிடங்குகள்,
9) காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம் இரயில் நிலையங்களில் விரைவு இரயில்கள் நிறுத்தம்
10) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்க வலியுறுத்தல்
11) செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை
12) மேல்மருவத்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக புதிய இரயில் இயக்க வலியுறுத்தல்.
13) காஞ்சிபுரத்தில் இருந்து கிண்டிக்கு சுங்குவார்சத்திரம், திருபெரும்புதூர், பூந்தமல்லி, போரூர் வழியில் அரசு - தனியார் பணியாளர்களுக்காக புதிய இருப்பு பாதை அமைக்க வலியுறுத்தல்
14) திருபெரும்புதூர், ஒரகடம், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரம் வரை புதிய இருப்புபாதை அமைக்க வலியுறுத்தல் போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.


No comments
Thank you for your comments