Breaking News

youtube சேனல் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த 2 பெண்கள்...!

 கோவை:

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே ஒருவீட்டில் (சிடபுள்யுடிஎஸ்) CWDS  என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவக்கி அதில் கோதை  நாச்சியார் சரளாதேவி இருவரும் 3 விதமாக youtube சேனல் துவங்கி  வீட்டில் இருந்தபடியே பெண்கள் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பல  மாவட்டங்களில் உள்ள பெண்களிடமும் ஆண்களிடமும் ஜி. பி.ஆர் ஆன்லைன் மூலமாக 10 ஆயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் பறித்து  கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளனர்... 



பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கோவை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடமும். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், அனைவரும் ஒருங்கிணைந்து பணத்தை மீட்டுக் கொடுக்க கோரி மனு அளித்தனர். 

அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யக்கோரியும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியாளர் அவர்களும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் கூறியுள்ளனர்.....!!! காவல்துறை அதிகாரிகளும் முன்புறமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில் உடன் இருந்தவர்கள் மனித உரிமை கழகம் கோவை மாவட்ட தலைவி மலர்விழி, சித்ரா,சாந்தி, சத்தியமூர்த்தி,. சதாசிவம்,பிரியா, பத்மா, உட்பட பலர் கலந்துகொண்டனர்

No comments

Thank you for your comments