நாமக்கலில் அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம்!
நாமக்கல் :
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக விருப்ப மனுக்களை பெற தொடங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி விருப்ப மனுக்களை கட்சியினரிடம் பெற்றுக் கொண்டாா்.
ஐந்து நகராட்சி, 19 பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவோா் ஆா்வமுடன் வந்திருந்தனா். அவா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் மாவட்டச் செயலாளா் தங்கமணியிடம் விருப்ப மனுக்களை சமா்ப்பித்தனா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்குதல், பெறுதல் பணி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. கடந்த 2019-இல் நகா்ப்புற தோ்தலுக்காக பணம் செலுத்திய கட்சியினா் உரிய ரசீதை சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்.
No comments
Thank you for your comments