ரேஷன் கடையில் நடக்கும் அவலம்.... அரசியை குளத்தில் கொட்டிசென்ற பொதுமக்கள்... வேதனையின் உச்சம்......
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ரேசன் கடையில் 24-11-2021 அன்று போடப்பட்ட அரிசி மிகவும் மோசமாக இறந்ததாக கூறி அப்பகுதி பொதுமக்கள் மாட்டுக்கு வாங்கி சென்றனர். எங்கள் வீட்டில் மாடு இல்லை நான் என்ன செய்வது...? பலபேர் வருத்தத்துடன் வாங்கி சென்றதாக தெரிகிறது மேலும் பொது மக்களிடம் ஒரு சிலரிடம் ரேஷன் கார்டுக்கு 16kg அரிசி தருவார்கள்.
ஏற்கனவே அரிசி போடும் போது 10kg நல்ல அரிசி போட்டார்கள். மீதமுள்ள 6Kg அரிசியை அடுத்த முறை போடும்போது தருவதாக கூறினார்கள்.
ஆனால் இப்போது free அரிசி என 5kg அரிசியும் பழைய பாக்கி அரிசி 6Kg அரிசியையும் சேர்த்து மொத்தமாக 10kg அரிசியை கொடுத்தார்கள். இந்த அரிசியை மனிதன் சாப்பிட முடியாது மாட்டுக்குத்தான் போடமுடியும்.
எங்களையும் மனிதர்களாக பார்க்கவும்.... என்று வேதனையுடன் குளத்தில் அரசியை கொட்டி சென்றனர் வேதனையில்...
ஆனால் ஒரசிலர் வீட்டில் மாடு இல்லை எனவே அப்பகுதியில் உள்ள திருக்குளத்தில் மீன்களுக்கு அரிசிகளைக்கொட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் ரேஷன் அரிசியை திருக்குளத்தில் மீன்களுக்கு கொட்டி துள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
No comments
Thank you for your comments