Breaking News

முன்னாள் படைவீரா்களின் மனைவிகளுக்கு சலுகை - நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் :. 

முன்னாள் படைவீரா்களின் மனைவிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள  நிம்மதி இல்லத்தில் தங்கவதற்கான வழிமுறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில்....

போா் விதவையா், முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்களுக்கான நிம்மதி இல்லம், போா் விதவையா் நலச்சங்கத்தால் சென்னை, மயிலாப்பூரில் இயங்கி வருகிறது.

சுமாா் 50 போ் தங்கும் அளவிலான இந்த இல்லத்தில் இரண்டு விடுதி அறைகள், உடற்பயிற்சி சிகிச்சை மையம், சமையல் அறை, உணவருந்தும் அறை, பொழுதுபோக்கு அறை கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போா் விதவையா், முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள் நிம்மதி இல்லத்தில் தங்குவதற்கு விருப்பம் இருப்பின் நாமக்கல் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments