Breaking News

பத்ம பூஷன் விருது பெற்றார் பி.வி.சிந்து

புதுடெல்லி:   

நமது நாட்டில் மிக உயரிய விருதுகள் என்றால் பத்ம விருதுகள் தான்.  கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டில் மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 7 பேருக்கும், பத்ம பூஷன் விருது 10 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது. இதில் 29 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. மற்றவர்கள் அனைவரும் ஆண்கள்.   119 பேரில் 16 பேர் மரணத்திற்குப் பிறகு விருது பெறுகிறார்கள். 

இவர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விளையாட்டுத் துறையில்  சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 


அவருடன் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மௌமா தாஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா ஆகியோரு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 

விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிப்பதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. சாதித்துக் காட்டிய இவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது. இதில் பிவி சிந்து இந்தியாவுக்காக 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் பெற்றுக்கொண்டார். 

👆Click here to see the list of Awardees


No comments

Thank you for your comments