அதிகாரிகளுக்கு நாமக்கல் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
நாமக்கல் :
குறைதீர்க்கவேண்டி வரப்பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 370 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் டி ஆர் ஓ துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments