உயிர் பீதியில் வாழ்ந்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு பசுமை வீடு கட்டி தருமா அரசு?
வேலூர், நவ.24-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசு கடந்த திமுக ஆட்சியில் 50 குருபஸ் வீடுகள் இலவசமாக கட்டி வழங்கியுள்ளார்கள். இதில் நரிக்குறவர் இன மக்கள் பெரியவர் முதல் குழந்தைகள் வரை வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நரிக்குறவர் வாழ்ந்து வரும் 31 வீடுகளில் மழை தண்ணீர் ஊறி வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நரிக்குறவர் வாழும் வீடு இடிந்து விழுந்து விடுமோ என்ற பீதியில் நாளுக்கு நாளாக பயந்து பயந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து பாக்கம் நரிக்குறவர் முன்னாள் தலைவர் ஆறுமுகம் மகன் கோபி தலைமையில் நரிக்குறவர் இன மக்கள் தலை மீது வீடு இடிந்து விழுந்து மண்டை உடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வீடுகளை நரிக்குறவ இன மக்கள் அனைவரும் சேர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது கருணை மனம் கொண்டு எங்களுக்கு பசுமை வீடு கட்டித் தருவார்கள் என்ற நோக்கத்தில் எங்கள் பகுதியில்நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் எங்களுக்கு பழுதடைந்த இடிந்த வீடுகளை சரிசெய்து பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தமிழக அரசு இடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று நரிக்குறவர் இன மக்கள் கூறினார்கள். இவர்கள் கோரிக்கை நிறைவேறுமா...?
No comments
Thank you for your comments