Breaking News

கால்வாய்களின் அடைப்புகள் அகற்றம் .... காஞ்சிபுரத்தில் அதிரடி ஆக்‌ஷன்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக பெய்த கனமழையால் மாவட்டத்திலுள்ள 381 ஏரிகளில் ஏரிகள் ‌‌‌‌‌முழுகொள்ளவை எட்டியும்‌ , உபரி நீர் முழுவதும் கலங்கள் வழியாக வெளியேறும் நிலையில் சில பகுதிகளில் வடிகால் ஆக்கிரமிப்பு , முறையாக பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர் கிராமப்பகுதிகளில் புகுந்து பொது மக்களுக்கு பெரும் இன்னல்கள் ஏற்படுகிறது.

 காஞ்சிபுரம் அடுத்த அகரம் பகுதியில் உள்ள ஏரி  நிரம்பி நீர் கலங்கள் வழியாக வெளியேறி பாலுசெட்டி ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நீர் உள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் வட்டாட்சியர் காமாட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்தியா சுகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவாக நீரை வெளியேற்றும் கால்வாய்கள் அடைப்புகளை சரி செய்ய மூன்று ஜேசிபி இயந்திரங்கள் வர வைக்கப்பட்டது.

இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக நீரை  அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து நெடுநேரம் பணியில் ஈடுபட்டு நாய்கள் தூர்வாரப்பட்டு நாள் உடைமையாக நீர் குறைந்து வந்ததை கண்டு  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், வெங்கடேசன் ஆகியோர்  மேற்பார்வையில் அந்த நீர் செல்லும் தொடர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் ஜேசிபி ஈடுபட்டுவருகிறது.

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள கால்வாய் அடைப்புகளை நீக்கியதால் நீர் வேகமெடுத்து வெகுவாக குறைந்து வீடுகளின் சுற்றுப்புற நீர்மட்டம் குறைந்தது.

இரவு என்று பாராமல் நீர் சூழ்ந்துள்ளதை புகார் தெரிவித்த சில மணி நேரங்களில் பணிகளைத் துவக்கிய மாவட்ட நிர்வாகத்தையும் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

No comments

Thank you for your comments