Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்

திருப்பூர் :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 7 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சரகங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . 

அதன்படி ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் மகேந்திரன், அவினாசி காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் சேலம் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனியம்மாள் , திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் கோவை மாநகருக்கும், கோவை மாநகர காவல் ஆய்வாளர் முத்துமணி, சேலம் மாவட்டம் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் திருப்பூர் மாநகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேசன் சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments