Breaking News

கால்வாயில் உடைப்பு.. நெல் பயிர்கள் சேதம்.. போதிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை...!

காஞ்சிபுரம்:

தாமல் ஏரியிலிருந்து திருப்புட்குழி ஏரிக்கு செல்லும் உபரி நீர் கால்வாயில்  உடைப்பு  ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. நெல் பயிர்கள் அழுகி சேதம்.... விவசாயிகள் வேதனை.... நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கூன் மதகு முழுமை அடைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கலங்கல் வழியே தண்ணீர் பாய்ந்தோடுகின்றது.



தாமல் ஏரியிலிருந்து திருப்புட்குழி ஏரிக்கு செல்லும் உபரி நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு காரணமாக  பல இடங்களில் உபரி நீர் கால்வாயில்  உடைப்பு  ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. 

அருகே உள்ள கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில் உபயோ கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால்  தாமல் பகுதியில் விவசாயம் செய்து வருகின்ற விவசாயிகள் ஜானகிராமன், சீனிவாசன், அருள், கோவிந்தராஜ், சேகர், பழனி, பாண்டுரங்கன் உள்ளிட்ட பல விவசாயிகளின் விளை நிலங்களில் உபரி நீர் சூழ்ந்தது.


அறுவடைக்கு இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக உள்ள விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் நெல் பயிர்கள் அழுகி சேதமடைந்தது.

கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பெரும் மனக் குமறலில் உள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, விளைநிலங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றி, போதிய நிவாரணம் அளிக்க வேண்டும் என  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments

Thank you for your comments