Breaking News

மாசில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:

மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாசில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி  காலை 6 மணி முதல்  7 மணி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் பசுமை பட்டாசுகளையே  பயன்படுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கஜலட்சுமி, உதவி பொறியாளர்கள் பிரபாகரன் ,அருண்குமார், உதவி மேலாளர் பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments