Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூர், நவ.16-

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளான ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட மக்களுக்கு அரிசி-மளிகை, பிரட், பாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை நிவாரணமாக வழங்கினார்.

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவ முகாம் கொரானா தடுப்பூசி முகாம் இவைகளையும் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் விரைவில் தமிழக முதல்வர் உறுதிமொழி கொடுத்தது போல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அதற்கான தனி குழு அமைத்து விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.  

இவருடன் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் பொது மக்களும் கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments