முட்புதர்கள் சூழ்ந்த தண்ணீர் மினி டேங்க்... பொது மக்கள் பெரும் அவதி
வேலூர், நவ.16-
வேலூர் மாவட்டம் சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளி பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் பள்ளியை சுற்றி முற்புதர்கள் செடி கொடிகளாலும் சூழ்ந்துள்ளன.
அதேபோல் அந்தப்பகுதியில் உள்ள பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள மினி டேங்க் மிகவும் பழுதடைந்த நிலையிலும் சுற்றி முள் புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்த மிகவும் அவதியுறுகின்றனர். இதை கண்டுக்கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றது..
உடனடி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது மக்கள் அவதியுறுவதை வேடிக்கை பார்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்...
No comments
Thank you for your comments