Breaking News

சிலம்பம் பயிற்சி மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி கிராமத்தில் சிலம்பம் பயிற்சி பள்ளி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

இந்த சிலம்பம் பயிற்சியில் பயிலும் மாணவர்கள் பிறந்த நாட்களில் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். இதேபோல் திங்களன்று சிலம்பம் பயிற்சி ஆசான் தமிழச்சிரீதாராசன் அவர்களின் பிறந்தநாளை சக மாணவர்களும் இணைந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பேரிச்சம்பழம் வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடினார்கள். 

அவரிடம் பேசும்போது பிறந்தநாளன்று மரங்களை வளர்க்க வேண்டும் ஒருவர் குறைந்தது ஐந்து மரங்களையாவது நட்டு அவற்றை காக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பேசினார்கள்.


No comments

Thank you for your comments