Breaking News

தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.10-

தலித் விடுதலைக் கட்சியின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   

இந்த ஆர்பாட்டத்தில்  ஈரோடு மாவட்டம் பெருந்துறை பட்டக்காரன் பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் ஆதிக்க சாதிகள் அனுபவித்து வருகின்றனர் என்றும், இதை கண்டித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.  

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட தலித் விடுதலை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மாணிக்கம்  தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நாகர் சேனைத்தலைவர் அருங்குணம் விநாயகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 பஞ்சமி நிலம் குறித்து விளக்க உரையை தலித் விடுதலை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகுந்தலா தங்கராஜ்      ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தலித் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர்    டாக்டர் எம் பி செங்கோட்டையன்  கலந்துகொண்டு பெருந்துறை பட்டக்காரர் பாளையம் பகுதியில் இருக்கும் ஆதிக்க சாதியின் பிடியில் இருக்கும் பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.   

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பாளர் ஆறுமுகம், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி ஆறுமுகம், மேற்கு மண்டல செயலாளர் செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments