Breaking News

கமிஷன் கொடுத்தால்தான் பில் பாஸ்... கறார் காட்டிய ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமால் கைது!

வேலூர், நவ.10-

லஞ்சப் பணத்தை ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமால் கை நீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர்.

வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான 'ஆவின்' தலைமை அலுவலகம், சத்துவாச்சாரியில் இருக்கிறது. இங்கு, உற்பத்தித் துறையின்கீழ் இயங்கும் 'ப்ரீ&பேக்கிங்' பிரிவில் ஒப்பந்த முறையில் பணியாளர்களைக் கொண்டு வேலைச் செய்துவருகிறார் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெயச்சந்திரன். இவரின் பணி, இயந்திரத்திலிருந்து வரும் பாலை அளவிடுவதும், பேக்கிங்கிற்குப் பிறகு சீலிடுவதும் தான். இதற்கான தொகையை மாதந்தோறும் ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரனுக்கு ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், ஆவின் உதவி பொதுமேலாளரான மகேந்திரமால், ஒப்பந்த பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை வழங்க கமிஷன் கேட்டிருக்கிறார். ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன், கமிஷன் கொடுக்க மறுத்ததால் சம்பளத் தொகையை நிலுவையில்வைத்து போக்கு காட்டியிருக்கிறார் மகேந்திரமால். 

நிலுவைத் தொகையைக் கேட்டு ஜெயச்சந்திரன் நடையாக நடந்த வேளையில், ரூ.5000 ஆயிரம் கமிஷன் கொடுத்தால்தான் பில் பாசாகும் என்று கறார் காட்டியிருக்கிறார் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால்.

கமிஷன் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். அதையடுத்து, ஆவின் உதவி பொதுமேலாளரை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரூபாய் ஐந்தாயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பினர்.

அதை வாங்கிக்கொண்டு, ஜெயச்சந்திரனும் மகேந்திரமாலிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால் கை நீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர். அலுவலகத்திலிருந்த கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆராய்ந்தனர். 

கைது செய்யப்பட்ட உதவி பொதுமேலாளர் மகேந்திரமாலுக்கு 57 வயதாகிறது. வேலூர் ஆவின் அலுவலகத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மகேந்திரமாலுக்குச் சொந்தமான சொத்து விவரங்களையும் சேகரித்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமால் வீட்டில் இருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும்  தோட்டாக்களும் பறிமுதல்

No comments

Thank you for your comments