சேந்தமங்களம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்!
சேந்தமங்கலம், நவ.10-
சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் பிரேனேஷ் ஆகியோரின் கூட்டுச்செயல்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்களும், இவ்விருவரின் தொடர் ஊழியர் விரோதப் போக்கையும் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து அப்பபுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்தின் போது சாலைப் பணியாளர்கள் தங்களுக்கான மதிய உணவை விறகடுப்பு கொண்டு அலுவலகம் முன்பே தயார் செய்தனர். இதனால் அப்பகுதியி பரபரப்பு நிலவியது.
No comments
Thank you for your comments