நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலைப்பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்!
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மரம் நடும் விழாவில் கலந்துகொண்டு மரம் நட்டார்.
பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாகுர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
No comments
Thank you for your comments