Breaking News

கொலை நகரமாக மாறிய வேலூர் மாநகரம்.... பொது மக்கள் அச்சம்

காட்பாடி, நவ.17-

காட்பாடியில் கஞ்சா குடித்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டு பாலாற்றில் வீசப்பட்டனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

காட்பாடி வண்டறந்தாங்கல் காலனியை சேர்ந்தவர்கள் விஜய் (வயது 20), நேசக்குமார் (24) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற 2 பேரும் அதன்பின் வீடு திரும்பவில்லை.  அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  அப்போது நேசக்குமார் அவர்களின் தாயார் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்த காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (25), பரத் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் 7 நபர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இவர்கள் உட்பட வண்டறந்தாங்கல் காலனி மற்றும் விருதம்பட்டு பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் 9 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றங்கரையோரத்தில் கஞ்சா குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது விஜய் மற்றும் நேசக்குமார் ஆகியோரை மற்ற 7 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இருவரின் உடல்களையும் அவர்கள் பாலாற்றில் வீசி விட்டு தப்பி விட்டதாக  7 பேரும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட விஜய், நேசக்குமார் ஆகியோர் உடல்களை மீட்க  பாலாற்றுக்கு சென்றனர். பல இடங்களில் தேடியும் உடல்கள் கிடைக்கவில்லை. இதனிடையே பிடிபட்ட பாலா, பரத் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பாலாற்றுக்கு அழைத்து சென்று எங்கு கொலை செய்து வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து விருதம்பட்டு போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் உடல்கள் மீட்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். மேலும்  7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பெருமுகை மேலாண்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பாலமுருகன் (வயது 20), மெக்கானிக். கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வந்தனர்.

இதேபோன்று அன்மையில்,  வேலூர் பெருமுகை மேலாண்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பாலமுருகன் (வயது 20), மெக்கானிக். கடந்த மாதம் 28&ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வந்தனர்.  இந்தநிலையில் பாலமுருகனின் நண்பர்களான தோட்டப்பாளையத்தை சேர்ந்த கரியன் என்கிற ஜெகதீஸ்வரன் (19) மற்றும் 17, 18 வயதுடைய 2 வாலிபர்கள் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் பாலமுருகனை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், கிரீன்சர்க்கிள் அருகே ஒரு ஓட்டல் பின்புறம் உள்ள காலி இடத்தில் அமர்ந்து அவர்கள் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், பாலமுருகனை அவர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் சென்றுவிட்டனர்.  சம்பவ இடத்துக்கு 3 பேரையும் போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் பாலமுருகன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், செந்தில்குமார் மற்றும் போலீசார் வேலூர் தாசில்தார் செந்தில் முன்னிலையில் பாலமுருகன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்து, காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறவில் உறங்கும் இரு பிச்சைக்காரர்களுக்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் இதில், ஒரு பிச்சைக்காரர் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகவும் காவல் தூறையினர் தெரிவித்தனர். 

இப்படி அன்மையில் வேலூர் மாநகரம் கொலை நகராமாக மாறிவருகின்றது...  பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வேலூர் மாநகரத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது... காவல் துறையினர் நடவடிக்கை என்ன என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது... 

No comments

Thank you for your comments