Breaking News

பள்ளிபாளையத்தில் சாலை விதிகள் மீறல்! - 146 வழக்குகள் பதிவு

நாமக்கல், நவ.17-

சாலைவிதிகளை மதிக்காமல் அதிக ஒளி உமிழ்வு விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் வகையில் வந்த 146  வாகனங்கள் மீது போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில்  அதிகபாரம் ஏற்றியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது  உள்ளிட்ட பல வகை சாலைவிதிகள் மீறலில் கீழ் 146 வழக்குகள் பதிவு செய்து, ரூ.6.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம்  பைபாஸ் சாலையில், தொடர்ந்து பதினைந்து  நாட்களாக வட்டார போக்குவரத்து அதிகாரி மாதேஸ்வரன் தலைமையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் குமாரபாளையம் சத்யா, திருச்செங்கோடு பிரபாகரன் ஆகியோரின்  வாகன தணிக்கையில் அனுமதி பெறா சுற்றுலா வாகனங்கள், இன்சூரன்ஸ் இல்லா வாகனங்கள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இருப்பினும் பல்வேறு விதிமீறல் வாகனங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது... அதிகம் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு தொடர்ந்து  சோதனை செய்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.  மக்கள் அவரவரே உணர்ந்து அவரவர் வாகனங்களிலிருந்து அதிக ஒலி எழுப்பும்  ஹாரன்கள் மற்றும் எல்இடி விளக்குகள் அகற்றினால் மட்டுமே சாலை விதிமீறல்  குற்றங்களை  குறைக்க  முடியும்... என்கின்றனர்.  ஈரோடு, நாமக்கல்  மற்றும் கரூர்  மாவட்ட எல்லைகளில் உள்ள  பாலங்களில் வரும் வாகனங்களை சரியான ஆய்வுக்கு உட்படுத்தினாலே பெருமளவில் சாலைவிதிமீறல்கள் குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments

Thank you for your comments