Breaking News

இந்தியாவில் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள் - ஐசிசி அறிவிப்பு

துபாய்:

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. 

அதன் விவரம் வருமாறு:

அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. 

2024 - 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்

2025 - சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

2026 -  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை

2027 - 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

2028 - 20 ஓவர் உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 - சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

2030 - 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,

2031 - 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments