பாலாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் மீட்பு பணிகளை தீவிரபடுத்தினார் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, பெரும்பாக்கம் கிராமத்தில் பாலாற்றில் பச்சையப்பன் என்ற 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் மூழ்கியதை தொடர்ந்து, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறையினரை வர வைத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார்.
மேலும் பச்சையப்பன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய பொருளாளர் தசரதன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அபுசாலி, காவல் துறையினர், அரசு அலுவலர்கள், மீட்பு படையினர் உள்ளனர்.


No comments
Thank you for your comments