நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கும் அவலம்... தொடர்கதை...
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்கு எதிர்ப் புறத்தில் அமைந்துள்ள நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கதையாக உள்ளது.
இந்த பகுதியில் தொடர்ந்து வருடம் வருடம் அதிக நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் பத்திரப்பதிவு அருகே ஆழ்துளை கிணறு மூலம் அங்கு தேங்கி நிற்கும் நீரை உள்ளிழுத்து செல்லும் நிலையில் ஆழ்துளை கிணறு அமைக்க இருந்தது.
தற்போது கடந்த மாதம் தேசிய புத்தக கண்காட்சி என்று அந்த இடத்தில் 1/2 அடிக்கு மேல் ரபீஸ் கொட்டி மூடி அதன் மீது தேசிய புத்தக கண்காட்சி அமைத்தது. இதனால் அங்கு இருக்கும் நீர் வெளியே செல்லமுடியாமல் முட்டி அளவுக்கு நீர் தேங்கி நிற்கும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அனுமதித்தது நெடுஞ்சாலைத்துறையா...? நகராட்சியா ...?என்பது கேள்விக்குறியாக உள்ளது. உடனே அதனை அகற்றி தண்ணீர் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments