Breaking News

ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம், நவ.15-

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஏராளமான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.


காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அன்னை ரேணுகாம்பாள் ஆலய வளாகத்தில் ஸ்ரீ ல ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் 41ஆம் ஆண்டு அன்னதானம் மட்டும் மலர் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. 

இதில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தொடர்ந்து பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். செல்வம் குருசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்தில் குருசாமி ஏற்பாட்டின்படி நெய் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக காலை கணபதி ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments