மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் அளவு எடுக்கும் முகாம்
விருத்தாசலம்:
அரசகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் வட்டாரம் அரசகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையுடன் The leprosy mission , Chidambaram, மற்றும் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது ,
இதில் கடலூர் துணை இயக்குனர் மரு. மீரா அவர்களின் வழிகாட்டலின் படி மருத்துவ அதிகாரி மரு. ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றினார் இன் நிகழ்ச்சிக்கு கம்மாபுரம் வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் புலிகேசி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, துணை இயக்குனர் தொழுநோய் பிரிவு மரு. சித்திரைச் செல்வி பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
Chidambaram The Lepsory mission மரு.மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார கல்வியாளர் சுரேஷ்பாபு, BHS. பாண்டியராஜன், இளங்கோ, அரியலூர் துணை செயலாளர் மரு. ரிச்சர்ட், திருச்சி இணை செயலாளர் மரு. வீர சிவா, மாநில செயலாளர் இயன்முறை மருத்துவர்.சசிகுமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 25 நபர்களுக்கு செயற்கை கால் அளவு எடுக்கப்பட்டது செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்
No comments
Thank you for your comments