Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம்...

 தருமபுரி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில்  அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

சமீபத்தில் பெய்த கனமழையால் ஏரி கால்வாய்கள் நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அரூர் பகுதிகள் முழுவதும் மரவள்ளிகிழங்கு, நெல், மஞ்சள், நிலக்கடலை, கேழ்வரகு, சாமை உள்ளிட்ட பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளன ஆக்கிரமிப்புகளை  அகற்றி தண்ணீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும்

அரூர் சேலம் நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆர் ஆர்.இன்ஃப்ரா என்ற நிறுவனம் சாலையில் வெட்டி எடுக்கும் மண்ணை நீர்வழி பாதைகளில் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தண்ணீர் வெளியேறாமல் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு  ரூபாய் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் .

மழையால் பழுதடைந்த வீடுகள் சாலைகள் பராமரிக்கப்பட வேண்டும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நீர்வழிபாதையை ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டியதால் விவசாயத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்திய ஆர் ஆர். இன்ஃப்ரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தர்மபுரி மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது அவைகளை புனரமைக்க வேண்டும் அல்லது தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர தமிழக முதல்வர் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தருமபுரி மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  பி.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி . டில்லிபாபு, மாவட்ட செயலாளர் அ.குமார் சிசுபாலன் மல்லிகா கோவிந்தன் ஏழுமலை நேரு பழனி ஆறுமுகம் தனலட்சுமி வேடியப்பன் ஜெயகாந்தன் சடையாண்டி  உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய விவசாய சங்க பொறுப்பாளர்கள்  விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments