Breaking News

குழாய் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர் - வாகன ஓட்டிகள் விழும் அவலம்... சீரமைக்குமா மாநகராட்சி...

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம் போயம்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே  நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.  

தண்ணீர் இடைவிடாமல் வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளது. 

அந்த சாலையில்  நடந்து செல்லும் பொதுமக்களும்  செல்ல முடியாமல் வழுக்கி விழுகின்றனர்...   இருசக்கர வாகனத்தில் செல்வோர்  சருக்கி நிலை தடுமாறி  கீழே விழுகின்றனர்.

 

ஏற்கனவே அங்கு பல்லாங்குழி சாலையாக உள்ளது. இந்நிலையில் தண்ணீர் அந்த குழிகளில் தேங்கி மேலும் விபத்து  ஏற்படும் அபாய நிலையில் உள்ளது...

மேலும் உடைப்புகளால் தண்ணீர் வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உடைப்புகளை சரி செய்து முறையாக பராமரித்தால் தண்ணீர் வீணாகாமல் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக  நடவடிக்கை எடுத்து தண்ணீரை நிறுத்தி,  போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


No comments

Thank you for your comments