வெள்ளத்தில் மூழ்கிய வாலாஜாபாத்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாலாற்றில் அதிகாலை முதல் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் பாலாறு ஆற்றின் இருந்து தண்ணீர் பெருகி வாலாஜாபாத் பேருந்து நிலையம், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை முற்றிலுமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாலாஜபத் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெய்த பெரு வெள்ளத்தின் போது கூட 45 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஒருவித காரணத்தினாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் வடகிழக்கு பருவ மழை அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடி நீர் அளவிற்கு சென்று கொண்டிருந்தது. நேற்று காலையில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திறந்து விடப்பட்ட ஒரு லட்சம் கன அடி நீரும் தற்போது பாலாற்றில் சென்று இருப்பதாலும் அந்த நீர் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளே புகுந்து வேகமாக ஆறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது. நிரம்பியுள்ள தரை பாலத்தின் மேல் நீர் இடுப்பு அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல ஆற்றிலிருந்து நிரம்பிய வரும் நீரானது வெளியேறி வாலாஜாபாத்தில் புகுந்துள்ளது . இதனால் வாலாஜாபாத் சாலைகளில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அதேபோல் அருகில் இருக்கும் அரசு பள்ளியிலும் நீர் புகுந்துள்ளது .
வரலாறு காணாத வெள்ளத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் பொது மக்கள் அவ்விடத்தில் கூடி உள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். அதேபோல இதனால் வாலாஜபத் பகுதியிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.




No comments
Thank you for your comments