Breaking News

நீச்சலடித்து பொது மக்களை காப்பாற்றிய வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன்...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தற்போது சென்று கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் பாலாற்றில் வேலூரில் இருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் பாலாற்றில் 30 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ள பெருக்கு அதிகமாகி உள்ளது.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் தரைப்பாலம் முழுமையாக ஆற்று வெள்ளத்தாலும் முழ்கி உள்ளது.

அதிக அளவு நீர் செல்வதால் பாலாற்றில் இருந்து தண்ணீர் வாலாஜாபாத் தரைப் பாலம் வழியாக வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ளது.

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் மற்றும் வாலாஜாபாத் சாலை வாலாஜாபாத் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நீர் புகுந்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் பகுதியில் ஒரு வீட்டிற்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது இதனால் வெள்ளத்தில் தத்தளித்த இருந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பு படையினர் வருவதற்குள்ளாகவே கைகளை பயன்படுத்தி கட்டி பொது மக்களை வெளியேற்ற தொடங்கினார்.

ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில்  வாலாஜாபாத்  தாசில்தார் லோகநாதன் நீச்சல் அடித்து சென்று காப்பாற்றினர். பத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை அப்பகுதியில் இருந்து மீட்பு படையினர் காப்பாற்றினர் இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 

No comments

Thank you for your comments