Breaking News

3 வேளாண் சட்டம் வாபஸ்... விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காஞ்சிபுரம் :

வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவிப்பு தொடர்ந்து வரவேற்று விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

இந்தியாவில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

இந்த நிலையில், ஓராண்டு கழிந்த நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து அவை திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோதி இன்று அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான அவரது அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் விவசாயிகள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் விவசாய சங்கம் சார்பில் காந்தி சாலை தேரடி அருகே விவசாய சங்க தலைவர் நேரு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதை வரவேற்றும், வேளாண்  சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் நன்றி தெரிவித்தும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

No comments

Thank you for your comments