நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறியதா தருமபுரி மாவட்ட நிர்வாகம்...?
தருமபுரி :
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தின் தம்பதியர்கள் ராமச்சந்திரன், கோவிந்தம்மாள் வயதான தம்பதியினர். இவர்களுக்கு தமிழக அரசு மூலம் கடந்த 1990ஆண்டு வீட்டுமனை வழங்கப்பட்டது.
இலவச பட்டா வழங்கப்பட்ட இடத்தில் குடிசைவீடு அமைத்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில். கடந்த1999-2000 ஆண்டுகளில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து தமிழக அரசு இலவச தொகுப்பு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்
இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்புறம் குடியிருந்து வரும் முபனா கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் வயதான தம்பதியினர் வசிக்கும் குடுயிருப்பில் ஒரு பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக அரூர் வருவாய் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளர், நில அளவையர் உள்ளிட்டோர் கோவிந்தம்மாள் அவரது கணவர் ராமச்சந்திரன் இருவரிடமும் சென்று நீங்கள் குடியிருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாங்கள் சொல்வதை போல் கேட்டு விட்டு விடுங்கள் என்றும்
நாங்கள் சொல்வது போல் நீங்கள் கேட்கவில்லை என்றால் உங்களது குடியிருப்பின் ஒரு பகுதியை அரசு அலுவலர்களாகிய நாங்கள் உங்களின் அனுமதி இல்லாமலே மிரட்டும் தோரணையில் அகற்றுவோம் என்று மிரட்டும் தோரணையில் மிரட்டியதாக கூறப்படுகிறது
எங்களுக்கு வழங்கிய வீட்டுமனை மற்றும் இலவச தொகுப்பு வீடு எங்களுக்கான வீட்டுமனைப்பட்டா இருந்ததால் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் தனிநபரின் ஒருவர் தேவைக்காக வீட்டை அகற்ற முடியாது என்று வருவாய் துறையினரிடம் பதில் அளித்த பிறகு
வருவாய்த்துறையினர்தொடர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக கோவிந்தம்மாள் குடும்பத்தினர் அரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் தீர்த்தமலை வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் தகவலின்பேரில் அரூர் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் ராமச்சந்திரனின் குடியிருப்பு வீட்டை காலி செய்ய சொல்லி சம்மன் அளித்த பிறகு காவல்துறையினரின் உதவியோடு வயதான முதியவர்கள் என்றும் பாராமல் ஜேசிபி இயந்திரம் கொண்டு குடியிருக்கும் வீட்டை இடித்து தள்ளி விட்ட நிலையில் வயதான தம்பதியினர் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழைக்காலம் என்பதால் குடியிருக்கும் வீட்டை சேதப்படுத்தி உள்ளது மன உளைச்சலையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
குடியிருக்கும் வீட்டை அப்புறப்படுத்தக் கோரி வருவாய் துறையினர் கோவிந்தம்மாள் வீட்டில் இல்லாத நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆக்கிரமிப்பு நோட்டீசை சுவற்று பகுதியில் ஒட்டிவிட்டு சென்ற நிலையில். கோவிந்தம்மாள் அரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் இருக்கும் நிலையில் கோவிந்தம் மாளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை எவ்வித முகாந்திரமும் இன்றி ரத்து செய்துவிட்டு குடியிருக்கும் வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் காவல்துறையினரின் உதவியுடன் இடித்துத் தள்ளியது நீதிமன்றத்தின் அவமதிப்பு செயலாகவே கருத படுவதாக வயதான தம்பதியினர் கூறுகின்றனர்.
அரூர் வருவாய்த்துறை மூலம் வீட்டை அப்புறப்படுத்த கோரிய சம்மன் குறித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறித்தும் சம்மன் அளித்தது குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்களுக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது
மேலும் வீட்டை அப்புறப்படுத்த கூடாது என்று மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கு எண் 154 /2021 வழியாக மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் சட்ட அறிவிப்பு வழியாக தபால் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றங்களின் உத்தரவுகளை பின்பற்றாமல் அரூர் வருவாய்த்துறையினர் குடியிருக்கும் வீட்டை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துத் தள்ளியது நீதிமன்ற அவமதிப்பு கான நடைமுறையாகும்.
இச்சம்பவம் குறித்து யாரிடம் போய் நீதி கேட்பது என்று தெரியாமல் வயதான தம்பதியினர் வழிகாட்டுதல் இன்றி தவித்து வருகின்றனர்
அதே கிராமத்தை சேர்ந்த முபனா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், 60 விவசாய குடும்பத்தினர் செல்லும் வழியில் கொட்டகை அமைத்து அடிப்படை விவசாய தேவைக்கு சென்று வரும் பாதையை வழிமறித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வாழிபாதை அடைத்துள்ளார்.
விவசாயி கந்தசாமி என்பவர் 60 விவசாயிகளும் சென்று வருவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தாத வருவாய்த்துறையினர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பெயரில் அரசு வழங்கிய வீட்டு மனை மற்றும் வீட்டை இடித்து தள்ளியது கையூட்டு பெற்றுக் கொண்டு முபனா கிருஷ்ணமூர்த்திக்கு துணையாக வருவாய்த்துறையினர் செயல்படுவதாக அப்பகுதி வாழ் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
✒ செய்தியாளர் இளம்பரிதி
No comments
Thank you for your comments