Breaking News

பள்ளியில் பாலியல் சீண்டல்: ஓயாமல் ஆர்பாட்டம் செய்த மாணவ-மாணவிகள்..

 பெருந்துறை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அரசு பள்ளியில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி,  பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக பேசுவதும் பாலியல் அத்து மீறல்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி சில தினங்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில்  ஒரு தினசரி நாளேட்டில் ஆசிரியர் தவறே செய்யவில்லை என்று செய்தி வெளியிடிருந்தனர்.  மேலும் மாணவ மாணவிரின் புகாரில் உண்மை இல்லை  என்றும் அந்த நாளிதழில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. 

இதனால்  பள்ளி மாணவர்களின் பெற்றோர் கொதிப்படைந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பெற்றோருடன் பள்ளி மாணவ மாணவியரும் சிலர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சமாதானம் அடைய மறுத்த மாணவ மாணவியர் அங்கிருந்து உச்சகட்ட கோபத்தில் புறப்பட்டு சீனாபுரத்தில் உள்ள கோபி ரோடு சந்திப்பில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.   

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரியவர அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் எம்.எல்.ஏ., ஜெயக்குமார்  மாணவ-மாணவியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதனால் சமாதானம் அடைந்த மாணவ மாணவியர் அங்கிருந்து கலைந்து மீண்டும் பள்ளியில் ஒன்று கூடி மாணவிகளிடம் ஒரு ஆசிரியர் தவறாக நடந்ததை கண்டித்து நடைவடிக்கை எடுக்காமல் விட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்யவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட துவங்கினர். 

இதனால்  இப்பிரச்சனை மீண்டும்  தலைதூக்கியது.  ஆகையால்  அங்கிருந்த எம்.எல்.ஏ., ஜெயக்குமார் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவருடன் வட்டாச்சியர்,  வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எஸ்.பி., கனகேஸ்வரி, ஏ.எஸ்.பி., கௌதம் கோயல், பெருந்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும்  கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாணவ மாணவியருடன் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். 

அதன் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் சஸ்பெண்ட் செய்ப்பட்டார். அதன் பிறகு  இப்பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

No comments

Thank you for your comments