Breaking News

டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், நவ.22-

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக  திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மத்திய அரசு குறைத்து கொடுத்ததை இதுவரை வரையறை செய்யாமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்  முரளிதரன்  தலைமையில் இளைஞரணி தலைவர் மோடி மற்றும் மாவட்ட மகளிரணி தலைவி அனிதா முன்னிலையில் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர தலைவர் வீரபாகு, மாநில செய்தி தொடர்பாளர் சுப நாகராஜன், மாநில பட்டியல் அணி தலைவர் பொன் பாலகணபதி, மாநில செயலாளர்  சண்முகராஜா,  மாநில செயற்குழு உறுப்பினர் கள் ஜிபிஎஸ் நாகேந்திரன், நாகராஜன், முருகன்  மாவட்ட பொதுச்செயலாளர் குமார், சுந்தர முருகன், அமைப்புச் செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர்  கணபதி, மாவட்ட துணைத் தலைவர்கள் ரமேஷ்குமார்,பவர் நாகேந்திரன், விஜயாகருணநிதி, ஊடகப்பிரிவு குமரன்

உட்பட பலர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

No comments

Thank you for your comments