அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம்
தருமபுரி, நவ.15-
தருமபுரி மாவட்டம் தருமபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனை கல்லூரி சுற்றுச்சுவர் அருகில் மருத்துவ கழிவுகள் மற்றும் நோயாளிகளின் கழிவுகள் சேமிப்பு கிடங்குகள் ஆக பயன்படுத்துவதால் அதிக கொசுக்கள் மற்றும் துர்நாற்றம் வீசுகின்றன.
அருகில் உள்ள ஆசிரியர் காலனியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கும், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நோய்கள் பாதிக்கும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த மருத்துவ கழிவுகள் மற்றும் நோயாளிகள் கழிவுகளை அகற்றுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் கிடங்கை குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments