நூல்கள் சிந்தனை! - யார் அவன்..?
வேலூர், நவ.14-
நூல் பெயர்: யார் அவன்..?
நூல் எழுத்தாளர் : சிந்து சீனு
பதிப்பாளர் : லாவண்யா புத்தகாலயம், வேலூர்.
பக்கங்கள்: 320,
தொகுப்பு வகை : நாவல்
விலை : ரூ.360
தொ.எண் : 63801 54198
ஒரு எளிய கிராமத்து படிக்காத முருகன்... சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ... தனி ஒருவனால்.. தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு சாலை வசதி , மின்சார வசதி, பள்ளிக்கூடம் என அந்த ஊரையே உயர்த்தும். தன் தங்கையின் மீது அளவு கடந்த பாசமும் அன்பும் வைத்து அவளின் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தும் திருவிழாவின்போது தங்கையை இவன் ஆச்சரியப்படுத்தினார்.
யாருமே எதிர்பாராத வண்ணம் தங்கை தரும் இன்ப உணவு அதிர்ச்சி பரவசமானது. எதிர்பாராதவிதமாக தங்கையின் தோழியை கண்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பதை எதிர் சமூகம் அவன் நன்னடத்தை சுதந்திர போராட்ட தியாகி என்று பாராமல் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் போதும் கோவிலின் சத்திரத்தில் தனிமையில் வலியோடு படுத்திருக்கும் போது தன் உடலை தட்டி எழுப்பப்படும் போது தன் அதிர்ச்சி மொத்தத்தையும் நம்மை கண்கலங்கச் செய்கிறது. சுத்தமான குடிநீர் .. சுவாசிக்க நல்ல காற்று... எங்கும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் ...சொன்னால் போதும் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அடுத்த நிமிடமே உதவிகள் வந்து சேரும்.
இது சாத்தியம்தானா? என்ற வினா எழும்பினாலும் இது 60களில் இருந்தது. இப்போது இல்லை என்ற பதில் தானாகவே வந்து விடுகிறது.
இது திருவண்ணாமலை.. வேலூர் என்று சுற்றி வருகிறது கதை.. அன்பு.. பாசம்.. மிக ஏமாற்றம்.. மனதின் வலியோடு யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு வந்து மனைவி குழந்தைகள் என நல்ல வாழ்க்கை வாழ்ந்து மறைந்தாலும் நாயகன் முருகன் நம்மையே சுற்றி வருகிறார். இதுவரை கவிதைத் தொகுப்புகள்.. சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் முதன்முதலாக நாவலை தொட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்நாவலைப் படித்து முடித்ததும் ஒரு கேள்வி எழும்புகிறது. நாம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை.. கௌரவம் தரப்படுகிறமோ? இல்லை... அது ஏன்? மதிப்பும் மரியாதையும் உரியவர்களுக்கு தந்து மதிப்பளித்து தீரவேண்டு. ஆசிரியரின் முதல் நாவல் போல் தெரியவில்லை. அனைவருக்கும் எளிமையாய் படிக்க அழுத்தமான பதிவு.
✒ நூல் சிந்தனை கருத்தாளர்: டாக்டர் இரா.தாட்சாயிணி குமார்
வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
No comments
Thank you for your comments