Breaking News

மநீம தலைவர் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஐயமிட்டு உண் நிகழ்ச்சி

மக்கள் நீதி மையத்தின்  தலைவர்  டாக்டர் கமலஹாசனின் 67-வது  பிறந்த நாளை முன்னிட்டு ஐயமிட்டு உண் நிகழ்ச்சி வேப்பூரில் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் வேப்பூா் கூட்டு ரோட்டில் கடலூர் தென் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் ஆணைக்கிணங்க மாநில செயலாளர்  வைத்தீஸ்வரன்  வழிகாட்டுதல்படி மாவட்ட செயலாளர் புதிதாக பொறுப்பேற்ற தொண்டங்குறிச்சி செந்தில்குமார் கணேசன் தலைமையில் கடந்த ஏழு நாட்களாக ஆவட்டி, தொழுதூர், பெண்ணாடம்,திட்டக்குடி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான  ஏழை எளிய மக்களுக்கு ஐயம்இட்டு உண் என்பதற்க்கு இனங்க உணவு பொட்டலங்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில்    வேப்பூா் கூட்டுரோட்டில்  சுமார் 500 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பிரந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 இதில் மண்டல செயலாளர் நற்பணி   பாபு சர்தார்,மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார்,  முருகன்,விருதை நகர அமைப்பாளர்  வேங்கட கிருஷ்ணன்  சேட்டு, சரவணன் மற்றும் திட்டக்குடி நகர செயலாளர்  செழியன், மற்றும் மணிகண்டன், மணிவேல்,தொழுதூர் கமல், பிச்சனூர் தனவேல் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது

No comments

Thank you for your comments