வீட்டு மனைப்பட்டா வழங்குவதில் முறைகேடு...!
தருமபுரி
மீண்டும் பரிசீலனை செய்து ஏழை எளிய மக்களுக்கு மனைப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் 52 ஏழை மக்களை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு முறைகள் நடந்திருப்பதாக தெரிவித்து சுமார் 12 ஆண்டுகளாக மனை பட்டா வழங்குவது நிலுவையில் உள்ளது.
வருவாய்துறையினர் வீட்டுமனை வழங்க உள்ள நிலங்களில் இருக்கும் முட்புதர்களின் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சீர் செய்ய நடவடிக்கை எடுத்தது.
அப்போது அங்கு திரண்ட மக்கள் 52 நபர்களின் பட்டியலில் தங்களுடைய பெயர்கள் இடம் பெறாததால் ஏற்கனவே வீடு வசதி உள்ளவர்களை இந்த பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை தடுக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது வருவாய் துறையினர் காவல் துறை உதவியுடன் அவர்களை வெளியேற்றிய பின்பு நிலங்கள் சமன் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இது குறித்து தெரிவித்த கிராம மக்கள், கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு வசதி இல்லாமல் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகிறோம் எனவும், தற்போது மழை காலம் என்பதால் தங்களின் வீடுகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளது.
வீடு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத தங்களை மேம்படுத்தும் வகையில் தற்போது முறைகேடாக தயாரித்துள்ள பட்டியலை நீக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் மறுபரிசீலனை செய்து ஏழை எளிய மக்களை தேர்ந்தெடுத்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை மீது விரைந்து விசாரணை நடத்தி உரியவர்ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவார்களா... என்ற கேள்வி எழுந்துள்ளது... துறைரீதியான நடவடிக்கையை துரிதமாக செயல்படுத்துவார்களா துறை துரிதமா? துயரமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
🔏 செய்தியாளர் இளம்பரிதி





No comments
Thank you for your comments