Breaking News

கொட்டும் மழையில் நெசவாளர்கள் குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கீழ்கேட் பகுதியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கொட்டும் மழையில்  மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரியும், நெசவாளர்கள் கொரோனா காலத்தில் கொடுக்கப்பட்ட நிதியை கொரோனா பேரிடர் நிதியில் இருந்து கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்களுக்கு தமிழக சட்டமன்ற நிதி நிலை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 சதவீதம் கூலி உயர்வையும் அதேபோல 10% பஞ்சப்படி உடனடியாக வழங்க வேண்டும். பொதுவாக மழைக்காலங்களில் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட முடியாது.  

சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு நெசவு தொழில் முழுமையாக பாதிக்கப்படும் அவ்வாறு பாதிக்கப்படும் நெசவாளர்களுக்கு 3000 தமிழக அரசு வழங்க வேண்டும்.

குறிப்பாக நெசவாளர்களுக்கு கொரோனா பேரிடர் காலத்தில் கடனாக அளிக்கப்பட்ட நிதியை நெசவாளர்கள் நலன் கருதி அதை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கைத்தறித் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதலே காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வந்தாலும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தங்கள் உரிமைக்காக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments

Thank you for your comments