"பவானி அம்மாள்" நகரில்.... சிமெண்ட் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
வேலூர், நவ.28-
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஆதிராவிடர் காலனி பகுதியில் அமைந்துள்ள "பவானி அம்மாள்" நகரில் சுமார் 32 வீடுகளுக்கு மேல் உள்ளது. “பவானி அம்மாள்” நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.
இன்று வரையில் அப்பகுதியில் சாலை வசதியின்றி மண் பாதையாகவே உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த மண் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சாலை வசதியின்றி மிகவும் அவதியுறுகின்றனர்.
முதியவர்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அந்த மண்சாலையும் புதர்கள் அடர்ந்து உள்ளது. இதனால் அந்த சாலையை பயண்படுத்தவே அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மண் சாலையும் மேடு பள்ளமாக உள்ளதால் வெயில் காலங்களிலும் அந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் அவதியுறுகின்றனர். மக்கள் நடப்பதற்கு கூட முடியாத மண் சாலையாகத்தான் இன்றளவும் உள்ளது.
இப்பகுதியில் உள்ள மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றித் தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் சாலை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராம ஊராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளாத அவல நிலையே இன்றளவும் நீடிக்கின்றது....
உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு அந்த சாலை வழியாக செல்லமுடியாத அவலத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர்.
இந்நிலையை உணர்ந்து, எங்களையும் மனிதர்களாக நினைத்து, எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண் சாலையை சிமெண்ட் சாலையாக அமைக்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் அடிப்படை தேவைக்கு மாவட்ட ஆட்சியர் செவிமடுப்பாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்...




No comments
Thank you for your comments