திமுக சார்பில் ஒருங்கிணைந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி
கோவை:
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மைதானத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் ஒருங்கிணைந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 288 அணிகள் கலந்து கொள்கின்றன. மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,
கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வேறு மாவட்டம், மாநிலத்திற்கு விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற செல்லும் வீரர், வீராங்கனைகளும், பள்ளி, கல்லூரிகளில் இருந்து பள்ளி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் வாங்கி வந்தால் திமுக மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திமுக இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments