Breaking News

நீதிமன்ற உத்தரவை மீறியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு

நாமக்கல், நவ.2-

நீதிமன்ற உத்தரவை மீறியதாக  நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பரமத்தி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ராசப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோவில் நிலங்கள் இருப்பதாக பட்டாவில் கூறப்பட்டதை நீக்க வலியுறுத்தி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் அந்த நிலங்கள் ராசப்பனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு தனி பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தனி பட்டா வழங்கப்படாததால் ராசப்பன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இது குறித்த வழக்கு விசாரணைக்கு அரசு தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். 


பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாநகர செயலாளர் துளசிராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணை பொது செயலாளர் க.சரவணன் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன்  கே.ஜி. குமரன், வேலூர் மாநகர அமைப்பு செயளாளர் சீ நாயுடு பாபு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்த 6,8 ஆம் வகுப்பு மாணவர்களை விண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, பள்ளியின் றிஜிகி தலைவர் வேல்முருகன்  மலரும், இனிப்பும் கொடுத்து வரவேற்றனர். உடன் பள்ளியின் தலைமை ஆசியர் இளங்கோவன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் இருந்து மாணாவர்களை "மகிழ்வுடன் கற்றிட" வரவேற்று மகிழ்ந்தனர்.





No comments

Thank you for your comments